June 10, 2020

#LettersForBlackLives - Tamil // Read by Nantha Rajdenran // #BlackLivesMatter

#LettersForBlackLives - Tamil  //  Read by Nantha Rajdenran  //  #BlackLivesMatter

A reading of the Letters for Black Lives translated into Tamil. Written and edited by the Letters For Black Lives Team. Translated by the #Translation-Tamil Team. Read by Nantha Rajendran. Video available on Instagram, Facebook, and YouTube @dearasianamer

A reading of the Letters for Black Lives translated into Tamil. Written and edited by the Letters For Black Lives Team. Translated by the #Translation-Burmese Team. Read by Nantha Rajendran.

Video available on:
Instagram: www.instagram.com/dearasianamericans
Facebook: www.facebook.com/dearasianamericans
YouTube: www.youtube.com/dearasianamericans

Transcripts of the letter below and also available at:
https://lettersforblacklives.com/ 

//

Mom, Dad, Uncle, Auntie, Grandfather, Grandmother
அன்புள்ள நண்பர்களே, குடும்பத்தினர்களே: We need to talk.  நாம் பேசியே ஆக வேண்டும்.
You may not have many Black friends, colleagues, or acquaintances, but I do. Black people are a fundamental part of my life: they are my friends, my neighbors, my family. I am scared for them.
உங்களுக்கு கறுப்பு இனத்தை சேர்ந்த நண்பர்களோ, சக ஊழியர்களோ, தெரிந்தவர்களோ இல்லாமல் இருக்கலாம். ஆனால், எனக்கு உள்ளனர். எனது வாழ்வின் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்: எனது நண்பர்களாக, அயலவர்களாக,  குடும்பத்தினராக. நான் அவர்களின் நிலை கண்டு அஞ்சுகிறேன்.
Recently, in Minnesota, a white police officer killed a Black man named George Floyd by kneeling on his neck for almost 9 minutes—ignoring his repeated cries that he was unable to breathe. Two more police officers helped pin Floyd down, while a fourth, Asian officer stood guard and didn't intervene. Floyd is not alone: Already this year, police officers killed Dreasjon Reed in Indiana and Tony McDade in Florida in May, and Breonna Taylor in Kentucky in March. An ex-detective killed Ahmaud Arbery in Georgia in February. 
சமீபத்தில், Minnesota மாநிலத்தில் ஒரு வெள்ளை இனத்தை சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர்  (George Floyd) என்ற பெயர் கொண்ட கறுப்பு இனத்தவரின் கழுத்தின் மீது 9 நிமிடம்  முட்டியிட்டார்.  Floyd “என்னால் முச்சுவிட முடியவில்லை” என்ற ஓலக்குரலையும் பொருட்படுத்தாமல் அழுத்திக்கொன்றார்.  மேலும் இரண்டு காவல் துறையினர் அவரை கட்டுப்படுத்தினர். நாலாவது ஆசிய காவல் துறையினர், நடப்பதை தடுக்காமல், காவலாக நின்றார்.இது தனிப்பட்ட நிகழ்வு கிடையாது: இந்த வருடம் மட்டும், காவல் துறையினர் Dreasjon Reed (Indiana), Tony McDade (Florida), Breonna Taylor (Kentucky), Ahmaud Arbery (Georgia), என்றவர்களை கொன்றனர்.
Overwhelmingly, the police haven’t faced consequences for murdering Black people, even when there’s been extensive media coverage. Imagine how many more incidents go unrecorded or unseen.

மேலும் வேதனையை அளிக்கும் விதமாக, இது போன்ற நிகழ்வுகளைப்பற்றிய செய்திகள்  பரவலாக ஊடகங்களில் இடம் பெற்றும்,  காவல் துறையினர் மீது எந்த விதமான ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இது போன்ற இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் வெளிவராமல் இருக்கலாம்.
This is a terrifying reality that the Black people I care about live with every day.
என்னுடன் வாழும் கறுப்பின மக்கள் அன்றாடம் சந்திக்கும் அச்சுறுத்தும் நிலமை இதுவே.
You might be thinking: We are also a minority. We’ve managed to come to America with nothing and built good lives for ourselves despite discrimination, so why can’t they?
நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்: நாங்களும் ஒரு சிறுபான்மையினர் தானே,  நாங்கள் ஒன்றுமில்லாமல் அமெரிக்காவிற்கு வந்து வாழ்வைத் தொடங்கினோம், பாகுபாடு இருந்தபோதிலும் எங்களுக்கு நல்ல வாழ்க்கையை கட்டியெழுப்பினோம், எனவே அவர்களால் ஏன் முடியாது?
I want to share with you how I see things. I am telling you this out of love, because I want all of us, including myself, to do better.
நான் விஷயங்களை எப்படிப் பார்க்கின்றேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதை நான் அன்பினால் சொல்கிறேன், ஏனென்றால் நான் உட்பட நாம் அனைவரின் வாழ்வும் மேம்பட விரும்புகிறேன்.
For the most part, when we walk down the street, people do not view us as a threat. We do not leave our homes, wondering whether or not we will return that day. We don't fear that we may die if we're pulled over by the police.
பெரும்பாலும், நாம் தெருவில் நடக்கும்போது, ​​மக்கள் நம்மை அச்சுறுத்தலாக பார்க்க மாட்டார்கள். அன்று நாம் திரும்பி வருவோமா இல்லையா என்று யோசித்து நாம் நம் வீடுகளை விட்டு வெளியேறுவதில்லை. நாம் காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டால் நாம் இறந்துவிடுவோம் என்று நாம் பயப்பட மாட்டோம்.
This is not the case for our Black friends.
எங்கள் கறுப்பு நண்பர்களுக்கு இது பொருந்தாது.

The vast majority of Black Americans are descendants of people who were sold into slavery and brought here against their will. For centuries, their communities, families, and bodies were abused as property for profit. Even after slavery, the government has not allowed them to build their lives—it has legally denied them the right to vote, get an education, or own homes and businesses. These inequalities are enforced by police and prisons—which can be directly traced back to white slave patrols and plantations. Black people are under a constant threat of violence that continues today. Their oppression has not ended; it has only changed form. 

கறுப்பின அமெரிக்கர்களில் பெரும்பான்மையானவர்கள் அடிமைத்தனத்திற்கு விற்கப்பட்டு அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இங்கு கொண்டு வரப்பட்ட மக்களின் சந்ததியினர். பல நூற்றாண்டுகளாக, அவர்களின் சமூகங்கள், குடும்பங்கள் மற்றும் உடல்கள் லாபகரமான சொத்தாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர். அடிமைத்தனத்திற்குப் பிறகும், அரசாங்கம் அவர்களின் வாழ்க்கையை அவர்களே தனித்து மீண்டும் கட்டியெழுப்ப விட்டுவிட்டது -  அத்துடன் வாக்களிக்கும் உரிமையோ, கல்வி பெறவோ, சொந்த வீடுகள் மற்றும் வணிகங்களை செய்யும்  உரிமைகளோ இன்றி வாழ்ந்தனர். இன்றும் தொடரும் வன்முறை அச்சுறுத்தலின் கீழ். அவர்களின் அடக்குமுறை முடிவுக்கு வரவில்லை; அதன் வடிவம் மட்டுமே மாறியுள்ளது.

Black people have not only persisted but also persevered against all odds. They’ve been beaten by police, jailed, and killed while fighting for many of the rights that we all enjoy today. Even in an unfair system that pits us against each other, Black organizers helped to end unfair immigration laws and racial segregation for us all.

கறுப்பின மக்கள் தொடர்ந்து பாகுபடுகளுக்கு மத்தியிலும்வாழ நினைக்காமல், எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக விடாமுயற்சியுடன் போராடினர். இன்று நாம் அனைவரும் அனுபவிக்கும் பல உரிமைகளுக்காக போராடும் போது அவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு கொல்லப்படுகின்றார்கள். ஒருவருக்கொருவர் எதிராக நம்மைத் தூண்டி ஒரு நியாயமற்ற அமைப்பில் கூட, நியாயமற்ற குடியேற்றச் சட்டங்களையும், நம் அனைவருக்கும் இனப் பிரிவினையையும் முடிவுக்குக் கொண்டுவர அவர்கள்உதவினர்.
Though there has been progress, this unfair system is still winning. After hundreds of years, our government is still killing Black people and getting away with it.
முன்னேற்றம் காணப்பட்டாலும், இந்த நியாயமற்ற அமைப்பு இன்றும் வெற்றி பெறுகின்றது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், நமது அரசாங்கம் இன்னமும் கறுப்பின மக்களைக் கொன்று அதிலிருந்து தப்பித்தே வருகிறது. I understand that you are worried and scared about the looting and property destruction that  you are seeing. But imagine how exhausted you would be to fight against the same state violence that your ancestors fought against. How angry you would be to see replaceable material objects valued over your children. How hurt you must be to protest like this in the middle of a pandemic. நீங்கள் காணும் கொள்ளை மற்றும் அழிவு குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள், பயப்படுகிறீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் உங்கள் முன்னோர்கள் எதிர்த்துப் போராடிய அதே மாநில வன்முறைக்கு எதிராகப் போராடுவதில் நீங்கள் எவ்வளவு சோர்வடைவீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் பிள்ளைகளின் உயிரைக்காட்டிலும் அற்பமான, எளிதில் மீட்டுக்கொள்ளக்கூடிய  பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதைப் பார்க்க நீங்கள் எவ்வளவு ஆத்திரப்படுவீர்கள். ஒரு தொற்றுநோயின்பாதிப்பிற்கு நடுவில் இப்படி ஒரு எதிர்ப்பினைக்காட்ட  வேண்டுமெனில் அது  ஒவ்வொருவரையும் எவ்வளவு புண்படுத்தி இருக்க வேண்டும்?
This is why I support the Black Lives Matter movement.  இதனால்தான் நான் ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கத்தை ஆதரிக்கிறேன்.
Part of that support means speaking up when I see people in my community—even my own family—say or do things that diminish the humanity of Black people. Our silence has a cost and we need to talk about it.
அந்த ஆதரவின் ஒரு பகுதி யாதெனில், எனது சமூகத்தில் உள்ளவர்களைப் பார்க்கும்போதோ பேசும்போதோ-எனது சொந்த குடும்பத்தினராய்  இருந்தால் கூட-கறுப்பின மக்களின் மனித நேயத்தைக் குறைக்கும் விஷயங்களைச் சொன்னாலோ செய்தாலோ நான் மௌனம் காக்க மாட்டேன். நமது மௌனத்திற்கு ஒரு பெரும் விலை உள்ளது, அதைப் பற்றி நாம் பேச வேண்டும். I am eternally grateful for the struggles you have endured in a country that has not always been kind to you. We have been blamed for bringing poverty, disease, terrorism, and crime. You’ve suffered through a prejudiced America so that I could have a better life.
எப்போதும் உங்களிடம் கருணை காட்டாத ஒரு நாட்டில் நீங்கள் தாங்கிய போராட்டங்களுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வறுமை, நோய், பயங்கரவாதம் மற்றும் குற்றங்களைக் கொண்டுவந்தோம் என்று நாம் குற்றம் சாட்டப்பட்டுள்ளோம். நான் ஒரு நல்ல வாழ்க்கையை பெற, பாரபட்சம் காட்டும் அமெரிக்காவால் நீங்கள் அப்போது பாதிக்கப்பட்டீர்கள்.

But these struggles also make it clearer than ever that we are all in this together, and we cannot feel safe until our Black friends, loved ones, and neighbors are safe. The world that we seek is a place where we can all live without fear. This is the future that I want—and I hope you want it, too.

ஆனால் இந்த போராட்டங்கள் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை முன்னெப்போதையும் விட தெளிவுபடுத்துகின்றன, மேலும் எங்கள் நண்பர்கள், அன்புக்குரியவர்கள் மற்றும் அயலவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இல்லாத வரை நாம் பாதுகாப்பாக உணர முடியாது. நாம் தேடும் உலகம் என்பது நாம் அனைவரும் பயமின்றி வாழக்கூடிய இடமாகும். இதுதான் நாம்விரும்பும் எதிர்காலம் - நீங்களும் அதை விரும்புவீர்கள் என்று நம்புகிறோம். With love and hope,அன்புடனும் நம்பிக்கையுடனும், Your childrenஉங்கள் பிள்ளைகள். 
“இது கருப்பு நிறத்தவரின் வாழ்க்கை கடிதங்கள் என்ற திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட திறந்த கடிதத்தின் தமிழ் பதிப்பு. இது #BlackLivesMatter இயக்கத்திற்கு ஆதரவையும் ஒற்றுமையையும் தங்கள் சமூகத்தில் பரவ உதவும். இந்தக் கடிதம் நூற்றுக்கணக்கான ஆசிய-அமெரிக்கர் இணைந்து எழுதி அதன் பின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை எழுதிய ஆசிய-அமெரிக்கர் தங்களுடைய தாய்-தந்தையோருடன் இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி நேர்மையான உரையாடலை பணிவுடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டுவோர்.”